கொரோனா அதிகரிப்பு – பேரவையில் அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம்!

தமிழ்நாட்டில் கொரோனா அதிகரிப்பு தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம்.

தமிழ்நாட்டில் கொரோனா அதிகரிப்பு தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம்.

தமிழகம் உள்ளிட்ட நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவு என்றும் தமிழ்நாட்டில் 90% எதிர்ப்பு சக்தி சிறப்பாக உள்ளது எனவும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.

அரசு மருத்துவமனைகள், பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா அதிகரிப்பு தொடர்பாக அதிமுக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கோரி நோட்டீஸ் அளித்துள்ளனர். முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரான சி.விஜயபாஸ்கர் எம்எல்ஏ கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீசை அளித்துள்ளார்.