குருப்-4 பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.. புதிய பட்டியலை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி!

குரூப்-4 பணியிடங்களின் எண்ணிக்கையை மீண்டும் அதிகரித்து, புதிய பட்டியலை வெளியிட்டது TNPSC.

tnpsc group 4

குரூப்-4 பணியிடங்களின் எண்ணிக்கையை மீண்டும் அதிகரித்து, புதிய பட்டியலை வெளியிட்டது TNPSC.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் அரசாங்கத்தின் கீழ் இயக்கிங்கும் பல்வேறு அரசு துறைகளில் உள்ள காலியிடங்கள் நிரப்புவதற்காக ஆண்டுதோறும் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கான தேர்வு அட்டவணை, காலிப்பணியிடங்கள் குறித்த விவரங்கள், தேர்வு முடிவுகள் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டு வருகிறது.

இந்த சமயத்தில், கடந்த 2022 ம் ஆண்டு மார்ச் மாதம் குரூப் -4 பதவிகளின் கீழ் வரும் காலிபணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இதற்காக சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்து அதில், 18,36,535 பேர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தேர்வு எழுதினர். இந்த தேர்வுக்கான முடிவு கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி வெளியானது.

இந்த சூழலில் குருப்-4 பணியிடங்களை அதிகரிக்க கோரி பல்வேறு அரசியல் தலைவர் உள்ளிட்ட பலரும் கோரிக்கை வைத்து வந்தனர். பணியிடங்களை அதிகரிக்க கோரிக்கை எழுந்த நிலையில், இதன் தொடர்ச்சியாக 7,301 ஆக இருந்த காலி பணியிடங்களை 10,178 ஆக உயர்த்தப்பட்டது. இந்த நிலையில், மீண்டும் குரூப்-4 பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்து, புதிய பட்டியலை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, குரூப்-4 பணியிடங்களுக்கான எண்ணிக்கையை 10,292-ஆக அதிகரித்து புதிய பட்டியலை வெளியிட்டுள்ளது டிஎன்பிஎஸ்சி. அதன்படி, புதிய பட்டியலில் 5,321 இளநிலை உதவியாளர்கள், 3,377 தட்டச்சர், 1,079 சுருக்கெழுத்தர், 425 விஏஓ, 69 பில் கலெக்டர், 20 கள உதவியாளர், 1 இருப்பு காப்பாளர் என மொத்தம் 10,292 காலி பணியிடங்கள் குரூப்-4 பதவிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.