#BREAKING: அதிகரித்த நிவர் புயலின் வேகம்..!

According to the Meteorological Department, the moving speed of Nivar storm has increased from 13 kmph to 14 kmph.

நிவர் புயலின் நகரும் வேகம் 13 கிலோமீட்டர் வேகத்தில் இருந்து 14 கிலோ மீட்டராக அதிகரித்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருவதாகவும், தற்போது நாகப்பட்டினத்தில் 36 கிலோ மீட்டர் வேகத்திலும், காரைக்காலில் 25 கிலோ மீட்டர் வேகத்திலும், கடலூர், பாண்டிச்சேரி மற்றும் சென்னையில் 18 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசிக் கொண்டிருக்கிறது என தெரிவித்துள்ளது.

நாகப்பட்டினத்தில் 51 மில்லி மீட்டரும் , காரைக்காலில் 69 மில்லி மீட்டரும், கடலூரில் 98 மில்லி மீட்டரும், புதுச்சேரியில் 82 மில்லி மீட்டரும், சென்னையில் 60 மில்லி மீட்டர் மழை பெய்து வருகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.