சுதந்திர தின விழா ஒத்திகையை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.
வருகின்ற ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று சுதந்திர தின விழா நடைபெறவுள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாட்டு ஒத்திகையை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.அதன்படி,காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை இந்த போக்குவரத்து மாற்றம் அமலில் இருக்கும்.
அதன்படி,நேப்பியர் பாலம் முதல் போர் நினைவுச்சின்னம் வரை உள்ள காமராஜர் சாலை,போர் நினைவுச்சின்னம் முதல் ரிசர்வ் வங்கி சுரங்கபாதையின் வடக்கு பகுதி வரை அமையப்பெற்றுள்ள ராஜாஜி சாலை மற்றும் கொடிமரச்சாலை ஆகிய சாலைகளில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில்,காமராஜர் சாலை, ராஜாஜி சாலை வழியாக பாரிமுனை செல்லும் வாகனங்கள் சுவாமி சிவானந்தா சாலை, அண்ணாசாலை, முத்துசாமி பாலம் வழியாக செல்லும் வகையிலும்,அதேபோல் பாரிமுனை பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் வடக்கு கோட்டை பக்கசாலை, முத்துசாமி பாலம், அண்ணாசாலை, வாலாஜா சாலை வழியாக செல்லும் வகையிலும் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.
மேலும்,அண்ணாசாலையில் இருந்து கொடி மரச்சாலை வழியாக பாரிமுனை செல்லும் வாகனங்கள் முத்துசாமி சாலை, ராஜாஅண்ணாமலை மன்றம், என்.எப்.எஸ். சாலை வழியாகவும்,முத்துசாமி சாலையில் இருந்து காமராஜர் சாலை செல்லும் வாகனங்கள் அண்ணா சாலை, வாலாஜா சாலை வழியாக செல்லலாம் என தெரிவிக்கப்பட்டள்ளது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…