அதிமுக பட்ஜெட்டில் வெறும் அறிவிப்புகள் இருக்குமே தவிர, அந்த அறிவிப்புகளை நிறைவேற்ற அவர்கள் இருக்க மாட்டார்கள்.
தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்றன் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று சென்னை வாலாஜாசாலை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற சட்டப்பேரவையில், தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 11-வது முறையாக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார்.
இதுகுறித்து அரசியல் பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிற நிலையில், திமுக எம்.பி தயாநிதிமாறன் அவர்கள் சென்னை துறைமுகம் தொகுதியில், புதிய அங்கன்வாடி மையம் மற்றும் காழிப்பிட கட்டடத்தை திறந்து வைத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ‘ஒய்யார கொண்டையிலே தாழம்பூவாம், அதன் உள்ளே இருக்குமாம் ஈறும் பேனும்..! அதிமுக பட்ஜெட்டில் வெறும் அறிவிப்புகள் இருக்குமே தவிர, அந்த அறிவிப்புகளை நிறைவேற்ற அவர்கள் இருக்க மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், கடன் சுமையை வரவிருக்கும் தளபதியின் ஆட்சிக்கு விட்டுவிட்டு தான் செல்ல போகிறார்கள். ஏனென்றால், உங்களுக்கே தெரியும், இவ்வளவு நாளும் எதுவும் செய்யாமல் இருந்துவிட்டு, தற்போது சாகும் போது சங்கரா…! சங்கரா…! இவர்கள் செயல்படுகிறார்கள். இவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்புகள் ஏமாற்றும் அறிவிப்புகள் தான்.’ என கூறியுள்ளார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…