2 ஆம் நிலையில்தான் தமிழகம் உள்ளது – பீலா ராஜேஷ் பேட்டி.!

கொரோனா தொற்றில் தமிழகம் இன்னும் 2ஆம் நிலையில்தான் உள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்று மற்றும் கொரோனா

கொரோனா தொற்றில் தமிழகம் இன்னும் 2ஆம் நிலையில்தான் உள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்று மற்றும் கொரோனா தொற்று 102 பேருக்கு உறுதி செய்யப்பட்ட நிலையில், இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 102 பேரில் 100 பேர் டெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பியவர்கள் என கூறியுள்ளார்.

மேலும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழகம் முழுவவதும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனர் என கூறினார். இதையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 411 பேரில், 364 பேர் டெல்லி நிஜாமுதீன் பகுதியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு தமிழகம் திரும்பியவர்கள் என குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் தமிழகம் கொரோனா வைரஸ் தொற்றில் இன்னும் 2 ஆம் நிலையில்தான் இருக்கிறது என தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் கொரோனா நோய் சமூக தொற்றாக மாறவில்லை என பீலா ராஜேஷ் குறிப்பிட்டார்.