சிறைவாசிகளுக்கு வீடியோ கால் வசதி அறிமுகம்.. இன்னும் ஒரு மாதத்தில் தமிழகம் முழுவதும்!

ஒவ்வொரு அழைப்பிலும், 12 நிமிடங்கள் வரை சிறைவாசிகள் வீடியோ கால் பேச முடியும் என அறிவிப்பு.

ஒவ்வொரு அழைப்பிலும், 12 நிமிடங்கள் வரை சிறைவாசிகள் வீடியோ கால் பேச முடியும் என அறிவிப்பு.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்டத் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. அப்போது, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதிய அறிப்புகளை வெளியிட்டிருந்தார். இதில் குறிப்பாக சிறைவாசிகளுக்கு வழங்கப்படும் ஆடியோ கால் வசதி 3 நாட்களுக்கு ஒருமுறை, மாதத்திற்கு 10 முறை, ஒரு அழைப்புக்கு 12 நிமிடங்கள் என உயர்த்தி வழங்குவதோடு, சிறைவாசிகளுக்கு வீடியோ கால்  வசதியும் புதிதாக ஏற்படுத்தப்படும் என அமைச்சர் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் கைதிகள் தங்கள் குடும்பத்தினரிடம் பேச வீடியோ அழைப்பு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒரு மாதத்தில் 10 முறை வீடியோ கால் செய்யலாம், ஒவ்வொரு அழைப்பிலும், 12 நிமிடங்கள் வரை பேச முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதி புழல் சிறையில் 1 மாதம் சோதனை செய்த பின் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிறைகளிலும் இந்த தொடங்கப்படும் எனவும் கூறியுள்ளனர். இந்த புதிய வசதி மூலம் சிறைவாசிள் தங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் வீடியோ கால் மூலம் பேசலாம்.