பெண் எஸ்.பி.க்கே கொலை மிரட்டல் விடுக்கும் துணிச்சல் குற்றவாளிகளுக்கு வந்தது எப்படி? என ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறப்பு டி.ஜி.பி.யால் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்ட பெண் எஸ்.பி.க்கே கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கொலை மிரட்டல் விடுக்கும் துணிச்சல் குற்றவாளிகளுக்கு வந்தது எப்படி?
புகாரளித்து 13 நாட்கள் கழிந்து விட்டன; தாய்மார்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்; ஐ.பி.எஸ். அதிகாரிகள் சங்கம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விட்டது; மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி விட்டது.
ஆனாலும் பழனிசாமி – அரண் போல் நின்று காப்பாற்றி வருவது நியாயமா? பெண்ணினத்திற்கே சாபக்கேடு! பொள்ளாச்சி வழக்கில் அ.தி.மு.க. குற்றவாளிகளை காப்பாற்றினார்.
இன்னொரு பாலியல் வழக்கில் – ஐ.ஜி.யைக் காப்பாற்றி தன் மீதுள்ள வழக்குகளை நீர்த்துப் போக வைத்தார் முதலமைச்சர். விவசாயிகள் மீதே கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்த தனது கைத்தடியான சிறப்பு டி.ஜி.பி.யையும், செங்கல்பட்டு எஸ்.பி.யையும் பாதுகாத்து நிற்கிறார்.
தலைமைச் செயலாளரும், உள்துறை செயலாளரும் சிறப்பு டி.ஜி.பி மற்றும் எஸ்.பி யை உடனடியாக கைது செய்ய உத்தரவிட வேண்டும். ஒருவேலை தாமதித்தால் தேர்தல் ஆணையமே நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…