பொதுச்செயலாளர் தேர்தலில் ஓபிஎஸ் தரப்பு போட்டியா? – புகழேந்தி விளக்கம்

பொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி போட்டியிடும் நிலையில், ஓபிஎஸ் போட்டியிடுகிறாரா? என விளக்கம்.

பொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி போட்டியிடும் நிலையில், ஓபிஎஸ் போட்டியிடுகிறாரா? என விளக்கம்.

அதிமுகவில் பொதுச்செயலாளர் தேர்தல் மார்ச் 26-ஆம் தேதி நடைபெறும் என்று நேற்று அறிவிக்கபட்ட நிலையில், இன்று இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது. பொதுச்செயலாளர் தேர்தல் குறித்து பேசிய ஓபிஎஸ், முறைப்படி இல்லாமல் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்படுகிறது. பிட்பாக்கெட் அடித்து செல்வது போன்று பொதுச்செயலாளர் தேர்தல் உள்ளது என குற்றசாட்டியிருந்தார்.

இதனைத்தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைகோரி ஓபிஎஸ் தரப்பில் மனோஜ் பாண்டியன் அவசர முறையீடு செய்துள்ளார். முறையீட்டை அவசர வழக்காக மனுதாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, நாளை காலை 10 மணிக்கு நீதிபதி குமரேஷ் பாபு முன்பு ஓபிஎஸ் தரப்பு மனு விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், பொதுச்செயலாளர் தேர்தலில் ஓபிஎஸ் போட்டியிடுவாரா என கேள்வி எழுந்தது.

இதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில், ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி கூறுகையில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் தங்கள் தரப்பு போட்டியிடவில்லை என்றும் நிரந்தர பொதுச்செயலாளர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா என்பதே எங்களது நிலைபாடு என விளக்கமளித்தார்.