வாக்களர்கள் தங்களுடைய வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களைVoter help lineசெயலி மூலமாக அவர்களே திருத்திகொள்ளும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.இந்த திட்டத்தை சென்னை மாநாராட்சி ஆணையர் பிரகாஷ் தொடங்கி வைத்தார்.
இதன் பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் .அப்பொழுது அவர் கூறுகையில், , மொபைல் அல்லது கம்ப்யூட்டரில்‘Voter help line’செயலியை பதிவிறக்கம் செய்து அதன் மூலம் திருத்தங்களை தாங்களே மேற்கொள்ளலாம்.மேலும் இந்த செயலியை பயன்படுத்த தெரியாதவர்களுக்கு உதவி செய்யும் வகையில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உதவி மையங்கள் வார்டு அலுவலகங்களிலும், இ-சேவை மையங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது.இந்த செயிலியில் வாக்களர்கள் திருத்தப்பட வேண்டிய விவரங்களை பதிவேற்றம் செய்த பின்னர் 15 நாட்களில் அந்த விவரங்கள் மாற்றம் செய்யப்படும்.