நல்லகண்ணுவை வீட்டு வசதி வாரிய குடியிருப்பிலிருந்து வெளியேற்றியது கண்டனத்திற்குரியது – தினகரன்

மூத்த தலைவர் நல்லகண்ணுவை வீட்டு வசதி வாரிய குடியிருப்பிலிருந்து வெளியேற்றியது கண்டனத்திற்குரியது என்று தினகரன் தெரிவித்துள்ளார்.

மூத்த தலைவர் நல்லகண்ணுவை வீட்டு வசதி வாரிய குடியிருப்பிலிருந்து வெளியேற்றியது கண்டனத்திற்குரியது என்று தினகரன் தெரிவித்துள்ளார்.

சிபிஐ கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு  தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருகிறார்.

வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் இருந்து அவர் திடீரென அதிகாரிகளால் வெளியேற்றப்பட்டார்.இந்த மனித நேயமற்ற செயல் பலதரப்பட்ட அரசியல் தலைவர்களால் இந்த விவகாரத்திற்கு  கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக அமமுக பொதுச்செயலளார் தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,நல்லகண்ணு, தியாகி கக்கனின் மகனுக்கு வேறு இடத்தில் அரசு வீடு ஒதுக்கி தர வேண்டும். மூத்த தலைவர் நல்லகண்ணுவை வீட்டு வசதி வாரிய குடியிருப்பிலிருந்து வெளியேற்றியது கண்டனத்திற்குரியது. தியாகி கக்கனின் மகனுக்கு மாற்று வீடு ஒதுக்கி தராமல்அரசு நடவடிக்கை மேற்கொண்டதுசரியல்ல  என்று தெரிவித்துள்ளார்.