ஈவிகேஎஸ் இளங்கோவன் யாரைத்தான் விமர்சிக்கவில்லை என்றுதமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
சோனியா காந்தியின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு திருநாவுக்கரசர் நேரில் பிறந்தநாள் வாழ்த்து கூறினார்.
அதன் பின்னர் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறுகையில்,ஈவிகேஎஸ் இளங்கோவன் யாரைத்தான் விமர்சிக்கவில்லை. ஈவிகேஎஸ் இளங்கோவனை திருப்திப்படுத்துவது என் வேலையல்ல, எனக்கு கட்சிதான் முக்கியம் .டெல்லியில் வரும் 10-ம் தேதி நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில், திமுக – காங்கிரஸ் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் . தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக யார் வேண்டுமானாலும் வரலாம், ஆனால் ஈவிகேஎஸ் இளங்கோவன் மட்டும் வரமாட்டார்.சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது, அரசியல் ரீதியிலான பழிவாங்கும் நடவடிக்கை என்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.