நாடாளுமன்றத்தை முடக்குவது ஆளும் கட்சிதான் – திருச்சி சிவா

டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர் செந்திப்பில் பேசிய மாநிலங்களவை திமுக குழு தலைவர் திருச்சி சிவா, மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க ஆளும் பாஜக அரசு தயாராக இல்லை. மணிப்பூர் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தவறியதால் வன்முறை பெரியதானது.
மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் ஒத்திவைப்பு தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டு வருகின்றனர். மணிப்பூர் வன்முறை குறித்து மாநிலங்களவையில் விளக்கமளிக்க மாட்டார் என அவைத்தலைவர் தெரிவித்துவிட்டார். நாடாளுமன்றத்தை செயல்படவிடாமல் தடுப்பது ஆளும்கட்சி உறுப்பினர்கள் தான், எதிர்க்கட்சிகள் அல்ல. யார் பக்கம் தவறு என்பதை நாட்டு மக்களை தான் தீர்ப்பளிக்க வேண்டும்.
மேலும் அவர் கூறுகையில், எய்ம்ஸ் கட்டடம் தாமதமாவதற்கு மத்திய பாஜக அரசுதான் முழு பொறுப்பேற்க வேண்டும். மதுரையில் இன்னும் எய்ம்ஸ் மருத்துவமனையை காட்டாமல் கடமை தவறியிருக்கிறது மத்திய அரசு.
மற்ற மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கட்டடங்கள் கட்டப்பட்டு செயல்படவே தொடங்கிவிட்டன. இந்தியாவிலேயே பாஜக நுழைய முடியாத மாநிலம் தமிழ்நாடுதான். பன்முகத்தனமாய் கொண்ட நாட்டை ஒற்றை தன்மையாக மாற்ற நினைக்கும் பாஜகவுக்கு தமிழ்நாடு மக்கள் ஆதரவு தர மாட்டார்கள். திமுக மீதான பாஜகவின் குற்றச்சாட்டு, இரும்பு கோட்டை மீது எறியப்பட்ட பட்டாணிகளை போல முனை மழுங்கி போகும் என்றார்.