அடுத்த 3 மணி நேரத்திற்கு 23 மாவட்டத்தில் மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்..!

The Met Office said it would rain in 23 districts for the next three hours.

அடுத்த 3 மணி நேரத்திற்கு 23 மாவட்டத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கடலூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான முதல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஈரோடு, நாமக்கல், கரூர், சேலம், திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை, விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.

unknown node