ஜல்லிக்கட்டு நாயகன் ஓபிஎஸ்! ஈபிஎஸ் புகழாரம்!

Chief Minister Palanisamy in his greetings praised EPS as Jallikattu Man. It was the AIADMK government that established the Jallikkattu game.

முதல்வர் பழனிசாமி அவர்கள், தனது வாழ்த்துரையில் ஈபிஎஸ்-ஐ ஜல்லிக்கட்டு  நாயகன் என புகழாரம் சூட்டியுள்ளார். ஜல்லிக்கட்டு விளையாட்டை நிலைநிறுத்தியது அதிமுக அரசு தான்.

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், நேற்று முன்தினம் அவனியாபுரத்திலும், நேற்று பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

அப்போது பேசிய முதல்வர் பழனிசாமி அவர்கள், தனது வாழ்த்துரையில் ஈபிஎஸ்-ஐ ஜல்லிக்கட்டு  நாயகன் என புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் அவர் பேசுகையில், உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு என்றால், அது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தான். இந்த மண்ணில் பிறந்த வீரர்கள் அனைவரும் சீறிவரும் காளைகளை பக்குவத்தோடு அடக்க இங்கு வந்துள்ளனர். நாட்டு  மக்கள் அனைவருமே இந்த நிகழ்ச்சியை தொலைகாட்சியில் பார்த்துக் கொண்டுள்ளனர். இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டை நிலைநிறுத்தியது அதிமுக அரசு தான் என தெரிவித்துள்ளார்.