#GoldLoan: ஜனவரி 3 முதல் நகைகள் ரிட்டன் – அமைச்சர் ஐ.பெரியசாமி

Minister I. Periyasamy has announced that only 14.5 lakh jewelery loans are eligible for the jewelery loan waiver.

நகைக்கடன் தள்ளுபடியில் 14.5 லட்சம் நகைக்கடன்கள் மட்டுமே ஏற்புடையது என்று அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு.

கூட்டுறவு வங்கியில் 5 சவரன் வரை நகைக்கடன் தள்ளுபடி குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, கூட்டுறவு துறை மூலம் பெறப்பட்ட 35 லட்சம் நகைக்கடன்களில் 14.5 லட்சம் நகைக்கடன்கள் மட்டுமே ஏற்புடையது என்றும் நகைக்கடன் பெற்றவர்கள் ஜனவரி 3 முதல் நகைகளை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதற்கும் சில தினங்களுக்கு முன்பு பேசிய அமைச்சர், மாநிலம் முழுவதும் ஆய்வு செய்து தகுதியானவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் பெற்றதில் முறைகேடு அம்பலமானத்தில் தள்ளுபடியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 5 பவுன் நகைகளை திரும்ப கொடுக்க பட்டியல் தயார் செய்து தணிக்கை துறை மூலம் சரிபார்க்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இதன்பின், கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் பெற்றவர்களின் 35 லட்சம் பேருக்கு நகை கடன் தள்ளுபடி கிடையாது என தெரிவிக்கப்பட்டது. நகைக்கடன் தள்ளுபடி பெறும் பயனாளிகளின் பட்டியலை இறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில், நகைக்கடன் பெற்றவர்கள் ஜன.3 முதல் நகைகளை பெற்றுக்கொள்ளலாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.