இளைஞர்களே கவனித்திற்கு!! 11 மாவட்ட இளைஞர்களுக்கு ராணுவத்தில் வாய்ப்பு..!

11 மாவட்டங்களில் இந்திய ராணுவத்தில் ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

11 மாவட்டங்களில் இந்திய ராணுவத்தில் ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதன்படி திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம் சு.கீழ்நாச்சிப்பட்டு ஊராட்சியிலுள்ள அருணை பொறியியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் வருகிறஏப்ரல் மாதம் 15 ம் தேதி முதல் 25ம் தேதிவரை ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடக்க உள்ளது.

இந்த முகாமில்சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப் பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர்ஆகிய 11 மாவட் டங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட  17 வயது முதல் 23 வயது வரை தகுதியுள்ள இளைஞர்கள் கலந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையில் நடைபெறுகின்ற ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில்

சிப்பாய் தொழில்நுட்பம்,

சிப்பாய் நர்சிங் உதவியாளர்,

சிப்பாய் நர்சிங் உதவியாளர் (கால்நடை),

சிப்பாய் எழுத்தர் மற்றும் ஸ்டோர்கீப்பர் தொழில்நுட்பம்,

சிப்பாய் பொதுப் பணி,

சிப்பாய் வர்த்தகர் ஆகிய பணியிடங்களுக்கும் இளைஞர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்பது  குறிப்பிடத்தக்கது.