அதிமுக வழக்குகள் தொடர்பாக அனைத்து தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கில் சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. அதிமுக பொதுக்குழு வழக்கில் காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு.
அனைத்து தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் தீர்ப்பை ஒத்திவைத்திருந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர்நீதிமன்றம். கடந்த ஆண்டு ஜூலை 11-ல் நடந்த அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் உள்ளிட்டோர் வழக்கு தொடுத்திருந்தனர்.
இந்த நிலையில், இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இதில், ஓபிஎஸ், இபிஎஸ் இருந்தாலும், யாருக்கு அதிமுக என தெரிந்துவிடும். அதிமுருக வழக்குகளில் சற்றுநேரத்தில் தீர்ப்பு வெளியாக உள்ளதால் நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.