100 நாள் வேலை திட்டத்தில் ஊதியம் 01-04-2022 முதல் ரூபாய் 281 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் துறைவாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது, ஊராட்சித்துறை கொள்கை விளக்க குறிப்பு வாசிக்கப்பட்டது. அதில், ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஒருநாள் கூலி ஏப்ரல் 1 முதல் உயர்த்தப்பட்டுள்ளது. ஆண், பெண் இருபாலாருக்கு ஒருநாள் கூலி ரூ.281 ஆக உயர்த்தப்பட்டுள்ளது எனவும் ஊரக உறுதி திட்டத்தில் கூலி உயர்வு குறித்து கொள்கை குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணியாளா்களுக்கான ஊதியத் தொகையில் மத்திய அரசானது 75%, மாநில அரசு 25% பகிா்ந்து கொள்கின்றன. அதன்படி, ரூ.674 கோடியே 84 லட்சத்து 82 ஆயிரத்தை மத்திய அரசு ஏற்கனவே விடுத்திருந்தது. 25% தொகையான ரூ.224 கோடியே 94 லட்சத்து 94 ஆயிரத்தை மாநில அரசு விடுத்திருக்கிறது. நிா்வாகச் செலவுகளுக்காக ரூ.49 கோடியே 32 லட்சத்து 18 ஆயிரம் ஒதுக்கப்பட்ட நிலையில், மொத்தமாக மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்துக்காக ரூ.949 கோடியே 11 லட்சத்து 94 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : மதுரை உயர் நீதிமன்றத்தில் பயிற்சி பெற்ற வழக்கறிஞராகப் பணியாற்றி வரும் வாஞ்சிநாதன், உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.…
ஜார்ஜியா : திவ்யா தேஷ்முக் மகளிர் செஸ் உலகக் கோப்பையை (FIDE Women’s World Cup 2025) வென்று முதல்…
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே ஹர்வான் பகுதியில் உள்ள தச்சிகாம் காட்டில், 'ஆப்ரேஷன் மகாதேவ்' என்ற பெயரில்…
டெல்லி : அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த விவாதத்தைத் தொடங்கி வைத்தார். ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து…
மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்…
சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம், கடந்த…