#Justnow : பாஜக உறுப்பினர் ஜடேஜாவால் CSK கோப்பையை வென்றது.! அண்ணாமலை பரபரப்பு.!

Annamalai tweeted that it was BJP worker Jadeja who brought victory to CSK.

annamalai

பாஜக காரியகர்த்தா ஜடேஜா தான் CSKவிற்கு வெற்றியை தேடி தந்துள்ளார் என அண்ணாமலை ட்வீட்.

நேற்றைய போட்டியில் கடந்த முறை கோப்பையை வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் சென்னை அணி இறுதிப்போட்டியில் களம் இறங்கியது. மழை குறிக்கீடு காரணமாக இரண்டாவது இன்னிங்ஸில் 15 ஓவராக குறைக்கப்பட்டது. முதலில் களமிறங்கிய குஜராத் அணி 214 ரன்கள் எடுத்திருந்தது.

அடுத்து களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 15 ஓவர்களில் 171 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இறுதிவரை போராடி கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலையில், சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் ஜடேஜா சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரியை என அதிரடியாக விளையாடிய நிலையில், ஐந்தாவது முறை சென்னை அணி கோப்பையை வென்றது.

சென்னை அணியின் வெற்றியை பாராட்டி, பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த வெற்றிக்கு அண்ணாமலை அவர்கள் தெரிவித்துள்ள வாழ்த்து சற்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள பதிவில், ‘கிரிக்கெட் வீரர் ஜடேஜா ஒரு பாஜக காரியகர்த்தா. அவர் மனைவி திருமதி.ரிவபா ஜாம்நகர் வடக்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர். மேலும் அவர் குஜராத்காரர். பாஜக காரியகர்த்தா ஜடேஜா தான் CSKவிற்கு வெற்றியை தேடி தந்துள்ளார்.’ என பதிவிட்டுள்ளார்.

unknown node