#JUSTNOW: மதுரை சரவணா ஸ்டோர்ஸில் தீ விபத்து!

மதுரை சரவணா ஸ்டோரில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு.

மதுரை சரவணா ஸ்டோரில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு.

மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடையின் 9வது தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தை தொடர்ந்து சரவணா ஸ்டோர்ஸ் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

தீ விபத்தை தொடர்ந்து சமத்துவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர். அவசரா உதவிக்காக ஆம்புலன்ஸ் வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. சரவணா ஸ்டோர்ஸ் கடையின் 9வது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.