#Justnow : பல் பிடிங்கிய விவகாரம் – மேலும் 5 பேர் விசாரணைக்கு ஆஜர்

ஐஏஎஸ் அதிகாரி அமுதாவின் இரண்டாம்கட்ட விசாரணையில் பாதிக்கப்பட்டவர்கள் மேலும் 2 பேர் விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர்.

ஐஏஎஸ் அதிகாரி அமுதாவின் இரண்டாம்கட்ட விசாரணையில் பாதிக்கப்பட்டவர்கள் மேலும் 2 பேர் விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர்.

பற்களை பிடுங்கிய விவகாரத்தில், முழுமையான விசாரணையை மேற்கொள்ள ஐஏஎஸ் அதிகாரி அமுதா நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று காலை அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து இரண்டாம் கட்ட விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், இன்று காலை ஐஏஎஸ் அதிகாரி அமுதா முன்  3 பேர் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். 3 பேரும் வழக்கறிஞர் துணையுடன் அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில்  ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.

இதனை தொடர்ந்து, தற்போது பாதிக்கப்பட்டவர்கள் 2 பேர் விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில், வேதநாராயணன், மாரியப்பன் ஆகியோர் ஆஜராகி உள்ளனர்.