தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை இயக்குனராக க.அறிவொளி நியமனம்…!

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை இயக்குனராக க.அறிவொளி அவர்களை நியமனம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
தமிழக பள்ளிக்கல்வி திரையில் புதிய இயக்குனர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை இயக்குனராக க.அறிவொளி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பள்ளிக்கல்வி இயக்குனர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தொடக்கக்கல்வி இயக்கத்தின் இயக்குனராக முனைவர் ச.கண்ணப்பன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்கத்தின் இயக்குநராக முனைவர் மு.பழனிச்சாமி நியமனம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.