கஜா புயல் எதிரொளிப்பையடுத்து, அனைத்து இடங்களிலும் கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு கடலோர காவல்படை சார்பில் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஆந்திராவுக்கு மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 150 பேர் தமிழகம் திரும்பினர். காசிமேடு, நாகை, காரைக்கால் பகுதியை சேர்ந்த மீனவர்கள் கிருஷ்ணாம்பட்டினத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.