கலைஞர் நூற்றாண்டு நூலகம் என்றென்றும் நிலைத்திருக்கும்..! அமைச்சர் உதயநிதி ட்வீட்..!

கலைஞர் நூற்றாண்டு நூலகம் என்றென்றும் நிலைத்திருக்கும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.

UdayanidhiTweet

கலைஞர் நூற்றாண்டு நூலகம் என்றென்றும் நிலைத்திருக்கும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் ஆண்டு விழாவாக இந்த ஆண்டு பல்வேறு நலத்திட்டங்கள், புதிய கட்டிடங்கள் திறக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் மதுரை நத்தம் சாலையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் பிரம்மாண்டமாக கட்டி முடிக்கப்பட்டது.

இந்நிலையில், சுமார் 206 கோடி ரூபாய் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட இந்த கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்ததோடு, நூலகத்தின் நுழைவு வாயிலில் உள்ள கலைஞரின் உருவ சிலையையும் முதல்வர் திறந்து வைத்தார்.

இதற்கிடையில், மக்கள் போற்றும் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மதுரையில் திறந்து வைத்து, கல்வி வளர்ச்சிக்கு முத்தமிழறிஞர் தீட்டிய சீரியத் திட்டங்களை எடுத்துரைத்து உரையாற்றிய மாபெரும் நிகழ்வில் பங்கேற்றோம்.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு கலைஞரிட்ட அடித்தளத்தில், கோட்டைகளைக் கட்டியெழுப்பும் நம் திராவிடமாடல் அரசின் சாதனைகளில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் என்றென்றும் நிலைத்திருக்கும் என்று விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.

unknown node