கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறும் திட்டத்தில் கைரேகை பதிவு கட்டாயம் என தமிழக அரசு அறிவிப்பு.
தமிழக அரசு கொண்டுவந்த கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் மாதம் ரூ.1000 வழங்கப்படுவதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதன்படி வரும் செப்டம்பர் 15 முதல் இந்த திட்டம் தொடங்கப்பட இருக்கிறது. தமிழகத்தின் அனைத்து நியாய விலைக்கடைகளிலும் இத்திட்டத்திற்காக விண்ணப்பித்துக் கொள்ளலாம் எனவும் அரசு தெரிவித்துள்ளது.
மேலும் இந்த மகளிர் உரிமைத்திட்டத்தில் பயன்பெறும் பயனாளர்கள் தங்களது கைவிரல் ரேகை பதிவு கட்டாயம் தேவைப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. வரும் ஜூலை 17 ஆம் தேதிக்குள் இதற்கான கைவிரல் ரேகைப்பதிவு கருவி, நியாயவிலைக் கடைகளில் இருப்பதையும், சீராக வேலை செய்வதையும் உறுதிசெய்ய வேண்டும் எனவும் உணவு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது.
