கலைமாமணி விருது வழங்கப்பட்டதில் முறைகேடு உள்ளதா என்பதை புதிய தேர்வு குழு அமைத்து விசாரிக்க உத்தரவு.
கடந்த 2019-20ல் அதிமுக ஆட்சியில் தந்த கலைமாமணி விருதுகள் குறித்து புதிய தேர்வு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அவசர கதியில் கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டதால் ரத்து செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சி காலத்தில் தந்த கலைமாமணி விருதுகளை திரும்பப்பெற உத்தரவிடக்கோரி சமுத்திரம் என்பவர் வழக்கு தொடுத்திருந்தார். 2019-20-ம் ஆண்டில் தகுதி இல்லாதவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டதாக மனுவில் புகார் தெரிவித்துள்ளார்.
கலைமாமணி விருது சான்றிதழில் தமிழ்நாடு இயல், இசை நாடக மன்ற நிர்வாகிகள் கையெழுத்து இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். எனவே, கலைமாமணி விருது வழங்கப்பட்டதில் முறைகேடு உள்ளதா என்பதை புதிய தேர்வு குழு அமைத்து விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.