நாளை நடைபெறவுள்ள 16-வது சட்டப் பேரவையின் முதல் கூட்டத்தொடர் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.
தமிழகத்தின் 16-வது சட்டப் பேரவையின் முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணா் அரங்கத்தில் நாளை நடைபெறவுள்ளது.இதற்காக,கடந்த வெள்ளிக்கிழமை முதல் சட்டப்பேரவை உறுப்பினர்கள், பத்திரிக்கையாளர்கள்,பேரவை செயலக ஊழியர்கள் உள்ளிட்டோர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதன்படி, கூட்டத்திற்கு வருபவர்களுக்கு கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,16-வது சட்டப் பேரவையின் முதல் கூட்டத்தொடர் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:
“16-வது சட்டப் பேரவையின் முதல் கூட்டத்தொடர் நாளை முதல் துவங்குகிறது.மக்கள் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை தந்து,அனைத்து அரசியல் தரப்புகளுக்கும் சமவாய்ப்பளித்து, ஆரோக்கியமான விவாதங்கள் நிகழச்செய்யவும், பேரவையின் மாண்பை நிலைபெறச் செய்யவும் உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்”,என்று தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…