ராஜேந்திர பாலாஜியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் !கமலஹாசன்

This news gives information about Kamal Hassan should remove Rajendra Balaji from post

மக்கள் நீதி மைய்யத்தின் தலைவர் கமலஹாசன் அரவக்குறிச்சி தொகுதியில் பிரச்சாரம்  மேற்கொண்ட பொழுது, இந்தியாவின் முதல் தீவிரவாதி நாதுராம் கோட்ஸ்யே என்று தெரிவித்தார். இது பெரும் விவாதத்தை உண்டாக்கியுள்ளது .

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கமலஹாசன் நாக்கை அறுக்க வேண்டும் என்று சர்ச்சைக்குரிய கருத்தை கூறினார். இது பலரது மத்தியில், ஒரு மாநிலத்தின் அமைச்சர் பேசும் பேச்சல்ல என்று முகம் சுளிக்க வைத்தது.

இதனிடையில் மக்கள் நீதி மையம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், பதவி பிரமாணத்தின் போது எடுத்து கொண்ட உறுதிமொழியை மீறியுள்ளார். அமைச்சர் பதவியில் இருந்து ராஜேந்திர பாலாஜியை நீக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜேந்திர பாலாஜியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் !கமலஹாசன்