காரின் இன்சூரன்ஸ் தொடர்பாக கமல் தரப்பு விளக்கம்..!

At present the explanation is given with evidence from Kamal Haasan's side. In it, it is reported that there is car insurance until 2022.

காரின் இன்சூரன்ஸ் தொடர்பாக சமூகவலைதளங்களில் எழுந்த கேள்விக்கு கமல் தரப்பு விளக்கம் கொடுத்துள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அனைத்துக் கட்சித் தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்,  மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தற்போது “சீரமைப்போம் தமிழகத்தை” என்ற பெயரில் தனது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், அவர் பிரச்சரத்திற்காக பயன்படுத்தி வரும் கார் இன்சூரன்ஸ் புதுப்பிக்கப்படாமல் உள்ளதாக நேற்று சமூக வலைதளங்களில் புகைப்படம் வைரலானது.

unknown node

இதைத்தொடர்ந்து, இன்சூரன்ஸ் முடிந்த காரில் ஏன் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறீர்கள்..? என கேள்வி எழுப்பினர். இதைத்தொடர்ந்து, சமூக வலைதளங்களில் நேற்று எழுந்த கேள்விகளுக்கு தற்போது கமல்ஹாசன் தரப்பில் இருந்து ஆதாரத்துடன் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், 2022 வரை கார் இன்சூரன்ஸ் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.