பாஜகவில் நாளை இணைகிறார் கராத்தே தியாகராஜன்.!

Former Congress executive Karate Thiagarajan is expected to join the BJP tomorrow.

காங்கிரஸ் முன்னாள் நிர்வாகியும் கராத்தே தியாகராஜன் நாளை பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை முன்னாள் மேயர் கராத்தே தியாகராஜன் நாளை பாஜகவின் மேலிட பொறுப்பாளர் சிடி ரவி முன்னிலையில் பாஜகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக மயிலாப்பூர் தொகுதியில் காங்கிரஸ் நிர்வாகியாக இருந்து வந்த கராத்தே தியாகராஜன் ஒழுங்கு நடவடிக்கை காரணமாக கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இதனிடையே, வரும் சட்டமனற்ற தேர்தலை முன்னிட்டு சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் அதிமுக – பாஜக கூட்டணிக்கே தன்னுடைய ஆதரவு என்று தெரிவித்திருந்த நிலையில், நாளை பாஜகவில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.