கர்நாடக தேர்தல்: இபிஎஸ்-ஐ எதிர்த்து அதே தொகுதிக்கு வேட்பாளரை அறிவித்தார் ஓபிஎஸ்!

கர்நாடக தேர்தலில் ஓ.பி.எஸ் தரப்பு வேட்பாளராக, அம்மாநில மாணவர் அணி செயலாளர் நெடுஞ்செழியன் நிறுத்தம்.

கர்நாடக தேர்தலில் ஓ.பி.எஸ் தரப்பு வேட்பாளராக, அம்மாநில மாணவர் அணி செயலாளர் நெடுஞ்செழியன் நிறுத்தம்.

கர்நாடக மாநிலத்தில் மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக மே 10-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கர்நாடகாவில் ஆளும் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் ஆகிய கட்சிகளிடையே போட்டி நிலவி வருகிறது.

தீவிர பிரச்சாரம்:

இதனால், ஆளும் பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில் பிரதமர் மோடி, ஜேபி நட்டா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் அடுத்தடுத்து அங்கு சென்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல், இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்ற காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, தலைவைர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோரும் கர்நாடகாவில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

வேட்பாளர்கள் அறிவிப்பு:

இதனிடையே, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்தனர். அதுமிலமில்லாமல் வேட்புமனு தாக்கலும் நடைபெற்று வருகிறது.இந்த சமயத்தில் கர்நாடக மாநிலம் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக போட்டியிடுகிறது என்று அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று பரபரப்பாக அறிவித்திருந்தார்.

அதிமுக வேட்பாளர்:

பாஜக கூட்டணியில் போட்டியிட வாய்ப்பு கேட்டதாக தகவல் வெளியான நிலையில், வேட்பாளர் அறிவிக்கப்பட்டது மேலும் பாஜக – அதிமுக கூட்டணியில் விரிசல் என கூறப்படுகிறது.  கர்நாடக மாநில சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில், புலிகேசி நகர் (159) சட்டமன்றத் தொகுதியில், அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக கர்நாடக மாநில அதிமுக அவைத் தலைவர் டி.அன்பரசன் போட்டியிடுகிறார்.

ஓபிஎஸ் வேட்பாளர்:

கர்நாடக தேர்தலுக்கு இபிஎஸ் சார்பில் வேட்பாளர் அறிவித்த நிலையில், ஓபிஎஸ் நிலை என்ன என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் புலிகேசி நகர் தொகுதி வேட்பாளராக நெடுஞ்செழியன் போட்டியிடுவார் என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நெடுஞ்செழியன் ஓபிஎஸ் தரப்பு மாநில மாணவர் அணி செயலாளராக உள்ளார்.

நேருக்கு நேர் மோதல்:

எனவே, ஒரே தொகுதியில் ஓபிஎஸ் – இபிஎஸ் தனித்தானியே வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதால் தொண்டர்கள் இடையே குழப்பம் இருந்து வந்தாலும், இபிஎஸ்-ஐ எதிர்த்து அதே தொகுதிக்கு ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் அறிவிக்கப்பட்டது என்பது ஒரு நேருக்கு நேர் மோதலாக பார்க்கப்படுகிறது.

unknown node