காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கர்நாடக அரசு செயல்படுத்த வேண்டும் : ரஜினிகாந்த்

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கர்நாடக அரசு செயல்படுத்த வேண்டும் என்றும், அணைகளின் கட்டுப்பாடு காவிரி மேலாண்மை ஆணையத்திடமே இருக்க வேண்டும்

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கர்நாடக அரசு செயல்படுத்த வேண்டும் என்றும், அணைகளின் கட்டுப்பாடு காவிரி மேலாண்மை ஆணையத்திடமே இருக்க வேண்டும் என்றும் நடிகர் ரஜினிகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்த நடிகர் ரஜினிகாந்த், தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலாளர்கள், இளைஞர் அணி நிர்வாகிகளை சந்தித்தார்.

இதன் தொடர்ச்சியாக இன்று, தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த மகளிர் அணி நிர்வாகிகளை ரஜினிகாந்த் சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்த நாடுகள் வளர்ச்சி கண்டிருப்பதாகவும், தமது கட்சியிலும் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவித்தார்.

ரஜினிகாந்தின் கட்சி 150 தொகுதிகளை ஆக்கிரமிக்கும் என்று வெளியான செய்தி குறித்து கேட்டபோது, அவ்வாறு நடந்தால் மகிழ்ச்சி என ரஜினிகாந்த் கூறினார்.

கர்நாடக அரசியல் விவகாரத்தில் ஜனநாயகம் வெற்றிபெற்றுள்ளதாக கூறிய அவர், எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் 15 நாள் அவகாசம் கொடுத்தது கேலிக்கூத்து என்று குறிப்பிட்டார்.