ரேஷன் கடைகளில் கதர் பொருட்களை விற்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ராஜ கண்ணப்பன் அறிவிப்பு.
தமிழக சட்டப்பேரவையில் 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த 20-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. திமுக அரசின் இரண்டாவது முழுமையான பட்ஜெட் இது. 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்திருந்தார். இதில், மகளிர் உரிமைத்தொகை, காலை உணவு விரிவாக்கத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மற்றும் அரசு துறைகளுக்கு நிதி ஒத்துக்கிடு செய்யப்பட்டது.
இதனைதொடர்ந்து, அடுத்த நாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதிலும் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம். இதன்பின் தொடர்ந்து தமிழக சட்டப்பேரவையில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் நடைப்பெற்று வருகிறது. இந்த நிலையில், அனைத்து நியாய விலைக்கடைகளிலும் கதர் பொருட்களை விற்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் ராஜ கண்ணப்பன் அறிவித்துள்ளார்.