பிரதமரின் கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக புகார் அளிக்க தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை சிபிசிஐடி போலீசார் வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு சார்பில் பிரதமர் கிசான் திட்டம் மூலம் ஆண்டுக்கு ரூ.6000 வழங்கப்படும் என 2018-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.அதன்படி விவசாயிகள் வருவாய்த் துறையிடம் தங்கள் நிலத்திற்கான பட்டா சிட்டா சான்றிதழ் வாங்கிக்கொண்டு வேளாண்மை துறை அலுவலகத்தில் விண்ணப்பித்து இந்த உதவித்தொகையை பெற்று வந்தனர். பின்னர் குறைந்த அளவே விவசாயிகள் பயன் பெறுவதால் அதிகளவு விவசாயிகள் பயன்பெறும் வகையில் விவசாயிகளே தானாக முன்வந்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இதனிடையே இந்த திட்டத்தில் தமிழகத்தில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல பகுதிகளில் முறைகேடு அதிக அளவில் நடைபெற்று இருப்பதாக புகார் எழுந்தது.இதனால் பல மாவட்டங்களில் பிரதமர் கிசான் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் பிரதமரின் கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக புகார் அளிக்க தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை சிபிசிஐடி போலீசார் வெளியிட்டுள்ளனர். கிசான் முறைகேடு பற்றிய தகவல்களை அளிக்க புகார் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தொலைபேசி எண்: 044-2851 3500 .,வாட்சப் எண்: 9498181035.
கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக தங்களுக்கு தெரிந்த தகவல்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்று சிபிசிஐடி தெரிவித்துள்ளது. பொதுமக்கள் அளிக்கும் தகவல்கள், புகார்களில் உள்ள விவரங்கள் ரகசியம் காக்கப்படும் சரியான தகவல் அளிக்கும் பொதுமக்களுக்கு வெகுமதிகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…