தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை கிளப்பிய கோடநாடு வீடியோ விவகாரம் தொடர்பாக முதல்வர் மீது குற்றசாட்டுகளை கூறிய குற்றம்சாட்டப்பட்டவர்கள் இந்த கொலை, கொள்ளைக்கு முக்கிய மூலக்காரணமே முதல்வர் தான் அவருடைய கூற்றால் தான் இந்த கொல்லை நடந்தது என்று கார் விபத்தில் இறந்த கனகராஜ் கூறியதாக டெல்லியில் சயன் மற்றும் மனோஜ் ஆகியோர் வாக்குமூலம் அளித்தனர்.
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் பொன்.ராதகிருஷ்ணன் எதை வைத்து கோடநாடு விவகார வீடியோ ஆதாரப்பூர்வமானது என்று கூறுகிறார்கள்? தேர்தல் வரும் நேரத்தில் யார் மீதும் சகதியை பூசுவார்கள் மக்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும். தேர்தல் நேரத்தில் குற்றஞ்சாட்டுபவர்கள் ஆதாரங்களை வைத்துக்கொண்டு குற்றஞ்சாட்ட வேண்டும்.
நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய கூட்டணியை பாஜக உறுதியாக அமைக்கும். பாஜக கூட்டணி தான் தமிழகத்தில் அதிகப்படியான இடங்களை கைபற்றும்.என்று கூட்டணி குறித்தும் தெரிவித்துள்ளார்.