அய்யோ! சிரிப்பு செத்துவிட்டதே! கலைச் சரித்திரம் சொல்லும் : நீ ‘காமெடி’க் கதாநாயகன் என பாடலாசிரியர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
நடிகர் விவேக் நேற்று மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவுக்கு நடிகர்கள் ,பொதுமக்கள் என பலர் நேரிலும், சமூக வலைத்தளங்கள் மூலமும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பாடலாசிரியர் வைரமுத்து தனது ட்விட்டரில் அய்யோ! சிரிப்பு செத்துவிட்டதே! எல்லாரையும் சிரிக்கவைத்த கலைஞன் அழவைத்துவிட்டுப் போய்விட்டானே! திரையில் இனி பகுத்தறிவுக்குப் பஞ்சம் வந்துவிடுமே! மனிதர்கள் மட்டுமல்ல விவேக்! நீ நட்ட மரங்களும் உனக்காக துக்கம் அனுசரிக்கின்றன. கலைச் சரித்திரம் சொல்லும் : நீ ‘காமெடி’க் கதாநாயகன் என பதிவிட்டுள்ளார்.
unknown node