தலைவர்கள்தான் அப்படி, தொண்டர்கள் இல்லை – அமைச்சர் சி.வி.சண்முகம்

AIADMK leaders are leaving the party and coming to the party, said Law Minister CV Shanmugam. Stalin alone was enough to destroy the DMK.

அதிமுக தலைவர்கள் பதவிக்காக வெளியே சென்றுவிட்டு கட்சிக்கு வருகின்றனர் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக செயல் வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், அதிமுக தலைவர்கள் பதவிக்காக வெளியே சென்றுவிட்டு கட்சிக்கு வருகின்றனர். ஆனால் அதிமுக தொண்டர்கள், எங்கும் செல்லாமல் உறுதியாக கட்சிலேயே உள்ளனர்.

அதிமுகவை மீண்டும் ஆட்சியில் அமரவைக்கும் வேண்டும் என்று இளைஞர்கள் மத்தியில் எழுச்சி ஏற்பட்டுள்ளது. சாதாரண தொண்டனுக்கும் பதவி கொடுத்து அழகு பார்க்கும் ஒரே கட்சி அதிமுக. ஆனால் திமுக அப்படி இல்லை, கருணாநிதி குடும்பத்தினருக்கு மட்டுமே பதவி கிடைக்கும். திமுகவை அழிக்க ஸ்டாலின் ஒருவரே போதும் என்றும் குற்றசாட்டியுள்ளார்.