சீருடை அணியாமல் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை – அமைச்சர் செல்லூர் ராஜூ

Fair price shop employees will be prosecuted if they do not wear uniforms - Minister Cellur Raju. I welcome Rajini's decision

நியாய விலைக் கடை ஊழியர்கள் சீருடை அணியாமல் இருந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் செல்லூர் ராஜூ

மதுரை தெப்பகுளத்தில் படகு சவாரியை துவக்கிவைத்த பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அப்போது, தமிழகத்தில் நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு சீருடை வழங்கப்படும் என்றும் நியாய விலைக் கடை ஊழியர்கள் சீருடை அணியாமல் இருந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, ரஜினி அரசியக்கு வரவில்லை என்ற அறிவிப்பு குறித்த கேள்விக்கு,  தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு ஆழமாக சிந்தித்து ரஜினி நல்ல முடிவு எடுத்துள்ளார். கட்சி தொடங்கப்போவதில்லை என்ற ரஜினியின் முடிவு வரவேற்கத்தக்கது. ரஜினி முடிவு எடுத்தது போன்று கமலும் முடிவு எடுக்க செல்லூர் ராஜூ வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.