கோயம்புத்தூர்,நீலகிரி மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தகவல்!

27-01-2026 முதல் 31-01-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு என வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.

WEATHER RAIN TN

சென்னை :கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 27-01-2026: மேற்கு தொடர்ச்சி மலையின் வடக்கு மாவட்டங்களிலும் (கோயம்புத்தூர் & நீலகிரி) மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்திலும் ஓரிரு இடங்களில் லேசான மழை (drizzle) பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 28-01-2026 முதல் 02-02-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

27-01-2026 முதல் 31-01-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு. 27-01-2026 முதல் 31-01-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டி இருக்கக்கூடும்.

சென்னையை பொறுத்தவரையில், இன்று (27-01-2026) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நாளை (28-01-2026) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்தவரையில், 27-01-2026 மற்றும் 28-01-2026: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.