#BREAKING: தமிழகத்தில் இரு நாட்களில் ரூ.854 கோடிக்கு மதுவிற்பனை..!

428 crore worth of liquor was sold in Tamil Nadu in a single day yesterday

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 428 கோடி ரூபாய்க்கு மது விற்பனை.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் டாஸ்மாக் கடைகளில் 428 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. சென்னை மண்டலத்தில் ரூ.98.96 கோடி, திருச்சி மண்டலத்தில் ரூ.87.65 கோடி, மதுரை மண்டலத்தில் 97.62 கோடி, சேலம் மண்டலத்தில் 76.57 கோடி, கோவை மண்டலத்தில் 67.89 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.

நேற்று முன்தினம் தமிழகத்தில் ரூ.426 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றது. இதனால், இரு நாட்களில் மட்டுமே ரூ.854 கோடிக்கு மதுவிற்பனையாகியுள்ளது.

இன்று முதல் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் இந்த முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடையை மூட உத்தரவு பிறப்பித்துள்ளதால் மது விற்பனை அதிகரித்துள்ளது.