சென்னை எண்ணூர் முகத்துவாரத்தில் எண்ணெய் கசிவு! நிவாரணம் அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Published by
பால முருகன்

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மாவட்டத்தில் பெய்த கனமழையின் போது  வெள்ளம் ஏற்பட்டது. அந்த வெள்ளத்தின் போது சென்னை பெட்ரோ கெமிக்கல் நிறுவன வளாகத்திலிருந்து எண்ணூர் முகத்துவார பகுதியில் வெள்ள நீரோடு எண்ணெய்யும் சேர்ந்து கசிந்து வந்தது.

இதனால் காட்டுக்குப்பம், சிவன்படை குப்பம், எண்ணூர் குப்பம், முகத்துவாரகுப்பம், தாழங்குப்பம், நெட்டுக்குப்பம், வ.உ.சி.நகர், உலகநாதபுரம் மற்றும் சத்தியவாணி முத்து நகர் ஆகிய கடலோர மீனவ கிராமங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளில் எண்ணெய் படிந்து சேதம் ஏற்பட்டது.

இதனையடுத்து, சென்னை எண்ணூர் முகத்துவாரத்தில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட 9,001 குடும்பங்களுக்கு ரூ.8.68 கோடி நிவாரணமாக வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியான அறிக்கையில் ”  எண்ணெய் கசிவினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மேற்கண்ட மீனவ கிராமங்களை சார்ந்த 2,301 குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையாக தலா ரூ.12,500 வீதமும், மேலும் எண்ணெய் கசிவினால் பாதிக்கப்பட்ட 787 மீன்பிடி படகுகளை சரிசெய்திட படகு ஒன்றிற்கு தலா ரூ.10,000 வீதமும் மொத்தம் 3 கோடி ரூபாய் அரசினால் ஒப்பளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்நிவாரணத் தொகை பாதிக்கப்பட்ட மீனவர்களின் வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்பட்டு வருகிறது.

மேலும் சென்னை மாநகராட்சி மண்டலம் 1, வார்டு 4, 6, மற்றும் 7 ஆகிய பகுதிகளில் எண்ணெய் கசிவினால் பாதிக்கப்பட்ட 6,700 குடும்பங்களுக்கு தலா ரூ.7,500 வீதம், மொத்தம் 5 கோடியே 2 இலட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும். இந்நிவாரணத் தொகையினை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். எனவே, மிக்ஜாம் புயல் கனமழையினால் ஏற்பட்ட எண்ணெய் கசிவினால் பாதிக்கப்பட்ட 9,001 குடும்பங்களுக்கு 8 கோடியே 68 இலட்சம் ரூபாய் வழங்கிடவும் முதலமைச்சர் ஸ்டாலின்  உத்தரவிட்டுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

IND Vs ENG: ”தொடரில் சிறந்த பேட்ஸ்மேனாக இருக்க விரும்புகிறேன்” – சுப்மன் கில்.!

இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…

11 hours ago

மாறன் குடும்பத்தில் பிளவு? கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன் நோட்டீஸ்.!

சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…

11 hours ago

ஆபரேஷன் சிந்து: ஈரானை தொடர்ந்து இஸ்ரேலில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர ஏற்பாடு.!

இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…

12 hours ago

வெடித்து சிதறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்.., ”இது வெறும் கீறல்தான்”- எலான் மஸ்க் பதிவு.!

டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…

13 hours ago

ஜூன் 24, 25ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.!

சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…

13 hours ago

அணு உலை தகர்ப்புக்கு பதிலடி.., இஸ்ரேலின் முக்கிய இடங்களை தாக்கிய ஈரான்.!

மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…

13 hours ago