தலைமை காவலரின் உயிரை பறித்த கட்டடத்தை ஓராண்டுக்கு முன்பே இடிக்க மதுரை மாநகராட்சி நோட்டீஸ் வழங்கியது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மதுரை கீழவெளி பகுதியில் நடமாடும் தேநீர் கடையில் தேநீர் விற்பனை நடைபெற்று இருந்தது. இதனால், அந்த இடத்தில் அதிகமாக கூட்டம் இருந்த நிலையில் கூட்டத்தை கலைந்து செல்லுமாறு இரவு நேர ரோந்து பணியில் இருந்த சரவணன், கண்ணன் இருவரும் கூறி விட்டு அதே பகுதியில் நின்று கொண்டிருந்தபோது அந்த பகுதியில் இருந்த முகம்மது இத்ரீஸ் என்பவருக்கு சொந்தமான 110 ஆண்டுகள் பழமையான கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது.
கட்டிடத்தின் முதல் மாடி சுவர் இடிந்து விழுந்து தலைமைக் காவலர் சரவணன் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார். படுகாயம் அடைந்த மற்றொரு தலைமைக் காவலர் கண்ணன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதைத்தொடர்ந்து, உயிரிழந்த காவலர் சரவணன் அவர்களின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி, அவரது மனைவிக்கு அரசுப்பணி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.
மேலும், பலத்த காயமடைந்த மற்றொரு தலைமைக் காவலரான கண்ணன் அவர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார். இந்நிலையில், தலைமை காவலரின் உயிரை பறித்த கட்டடத்தை ஓராண்டுக்கு முன்பே இடிக்க மதுரை மாநகராட்சி நோட்டீஸ் வழங்கியது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…