மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் – கட்டண விபரம் வெளியீடு!

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் பார்க்க கட்டண விபரம் வெளியீடு.

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் பார்க்க கட்டண விபரம் வெளியீடு.

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண விழாவில் பங்கேற்க ரூ.500 மற்றும் ரூ.200 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கட்டணமில்லா தரிசனத்திற்கு தெற்கு கோபுரம் வழியாக முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் அனுமதி வழங்கப்படும்.

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் பார்க்கhttps://hrce.tn.gov.inமற்றும்https://maduraimeenakshi.hrce.tn.gov.inஆகிய இணையதளங்களில் ஏப்ரல் 22ம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை முன்பதிவு செய்து கொள்ளலாம். அதன்படி, ஒருவர் ரூ.500 கட்டண சீட்டை இரண்டு முறையும், ரூ.200 கட்டண சீட்டை மூன்று முறை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேற்கு சித்திரை வீதியில் உள்ள தங்கும் விடுதியில் நேரில் சென்று ஆதார், புகைப்படம் அளித்து முன்பதிவு செய்யலாம். பதிவு செய்யப்பட்டதாக எஸ்எம்எஸ் வந்தவுடன் ஏப்ரல் 27-ஆம் முதல் 30ம் தேதி வரை அனுமதி சீட்டை பெறலாம் எனவும் கூறியுள்ளனர். மேலும், வெளியூர் நபர்கள் மே 1ம் தேதி அன்று அனுமதி சீட்டை பெற்று கொள்ளலாம் என்றும் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி மே 2-ஆம் தேதி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.