மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான விரிவான அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
சென்னையைத் தொடர்ந்து கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை விரிவுபடுத்த தமிழ்நாடு அரசு முயற்சித்து வந்த நிலையில் மதுரையில் மெட்ரோ ரயில் பாதை அமைப்பதற்கான அறிவிப்பு 2023-24 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் வெளியிடப்பட்டது.
அந்த வகையில் தற்பொழுது, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்த விரிவான திட்ட அறிக்கை 75 நாட்களுக்குள் தயாரிக்க வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. மதுரையில் திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை 31 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் சேவை அமைக்க உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.