மதுரை சரவணா ஸ்டோர்ஸ் கடையில் 9-ஆவது தளத்தில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக தீ எரிந்து வருகிறது.
மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடையின் 9வது தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தை தொடர்ந்து சமத்துவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தீ விபத்தை தொடர்ந்து சரவணா ஸ்டோர்ஸ் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டதாக கூறப்பட்டது. இருப்பினும், அவசரா உதவிக்காக ஆம்புலன்ஸ் வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. சரவணா ஸ்டோர்ஸில் தீ விபத்து ஏற்பட்டதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், மதுரை சரவணா ஸ்டோர்ஸ் கடையில் 9-ஆவது தளத்தில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக தீ எரிந்து வருவதாக கூறப்படுகிறது. 40க்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.