மாஃபா அறக்கட்டளையை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் சமத்துவ பொங்கல் கொண்டாடியுள்ளனர்.
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை சாதி, மத பேதங்களை மறந்து அனைத்து கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் சமத்துவ பொங்கலை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் மாஃபா அறக்கட்டளையை சேர்ந்த 35-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள், பாரம்பரிய உடையில் பொங்கல் வைத்து, விளையாட்டு போட்டிகளை நடத்தி, சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடியுள்ளார்.