மணியாச்சி விபத்து.. முதல்வர் நிவாரணம் அறிவிப்பு..!

The Chief Minister of Tamil Nadu has announced Rs. 1 lakh relief for the families of the 5 persons who lost their lives in the truck accident.

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்து தலா ரூ.1 லட்சம் நிவாரணம் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே சரக்கு வாகனத்தில்  33 பெண்கள் விவசாய பணிக்காக அழைத்து செல்லப்பட்டனர். அப்போது, வேன் எதிர்பாராத விதமாக டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பெண்கள் உயிரிழந்தனர்.

ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்து தலா ரூ.1 லட்சமும், பலத்த காயம் அடைந்தவர்கள் தலா ரூ.50 ஆயிரமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.