அவரால் ஆதாயம் அடைந்தவர்கள் பலர்., மீண்டு வந்து அரசியலில் ஈடுபட வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்

DMDK Treasurer Premalatha Vijayakand has said that Sasikala should be released with health and engage in politics.

சசிகலா ஆரோக்கியத்துடன் விடுதையாகி அரசியலில் ஈடுபட வேண்டும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தலையொட்டி ஸ்ரீபெரம்பத்தூர், பல்லாவரம், தாம்பரம் ஆகிய தொகுதிகளில் தேமுதிக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் இன்று சென்னையை அடுத்து சிக்கராயபுரத்தில் நடைபெற்றது. இதில் மூன்று தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பாளர்களை பிரேமலதா விஜயகாந்த் அறிமுகம் செய்து வைத்து உரையாற்றினார்.

இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், தொண்டர்கள் விரும்பினால் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன். ஜெயலலிதா என்ற ஒருவருக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்து வாழ்தவர் சசிகலா. இன்றைக்கு வேண்டுமானால் அதை யாரும் இல்லை என்று சொல்லலாம், மறுக்கலாம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.

ஆனால், சசிகலாவுக்கு ஒரு தனி வாழ்கை கிடையாது, அதுதான் உண்மை. சசிகலாவால் ஆதாயம் பெற்றவர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள். ஆதாயம் பெற்றவர்கள் கூட சசிகலாவை வேண்டாம் என்று சொல்லுவது மனதிற்கு கடினமாக இருக்கு. சசிகலா நல்ல ஆரோக்கியத்துடன் விடுதலையாகி தமிழக அரசியலில் ஈடுபட வேண்டும் என்றும் ஒரு பெண்ணாக அந்த பெண்ணுக்கு என்னுடைய முழு ஆதரவு உண்டு எனவும் தெரிவித்துள்ளார்.