மதச்சார்பற்ற எங்கள் கூட்டணி தேர்தலில் மகத்தான வெற்றி பெரும் – நல்லகண்ணு!

Communist leader of India Nallakannu has said that our secular coalition will win a huge victory in the 2021 assembly elections.

2021 சட்டமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற எங்கள் கூட்டணி தேர்தலில் மகத்தான வெற்றி பெரும் என இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கட்சிகள் அனைத்தும் தங்களுக்கான தேர்தல் பிரச்சாரங்களை தற்பொழுதே மறைமுகமாக துவங்கிவிட்டது என்று தான் சொல்லியாக வேண்டும். தங்கள் கட்சி தான் வெற்றி பெரும் என ஒவ்வொரு கட்சி தலைவர்களும் மக்களுக்கு தங்கள் செய்த நன்மைகளையும் ஞாபகப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், வருகின்ற 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் நல்லகண்ணு அவர்கள் பேசுகையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியாக தங்கள் கட்சி தான் வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெரும் என தெரிவித்துள்ளார். அரசியல் சட்டத்திற்கு ஆபத்து வந்துள்ளதாகவும், அரசியல் சட்டம் நிலைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும், தெரிவித்துள்ள அவர், சுதந்திரத்திற்காக எப்படி போராடினோமோ அதை போலவே தங்களின் வெற்றியை காக்கவும் போராட வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.